தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிகரித்தது எரிபொருள்களின் விலை! மாஙகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி..

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  புதிய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் 92 ஒக்ரின் பெற்றோலின் விலை 6 ரூபாயாலும் 95 ஒக்ரின்பெற்றோலின் விலை 5ரூபாயாலும், ஓட்டோ டீசல் விலை 4 மற்றும் சுப்பர் டீசல் விலை 8 ரூபாயாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு. புதியவிலையின் படி பெற்றோல்- (92) – 129 ரூபா, (95)- 152 ரூபா , ஓட்டோடீசல் 99 ரூபா , சுப்பர் டீசல்126 ரூபாலும் அதிகரிக்கபப்ட்டுள்ளது.

இந்நிலையில் மாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு  (11)10.50 மணிக்கே  எரிபொருளின் விலையை மாற்றியுள்ளனர்

இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் அடிக்க சென்ற நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில்அங்கு கடமையில் இருந்தவரிடம் வினவியபோது உயர் அதிகாரிகளின் பணிப்பிலேயே விலையை மாற்றியதாக தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த நபர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சென்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார்சம்பவ இடத்துக்கு வருகைதந்து உடனடியாக பழைய விலைகளுக்கு மாற்றுவித்ததோடு பாதிக்கப்பட்ட நபருக்குரிய மீதிதொகையையும் பெற்றுக்கொடுத்தனர்

எரிபொருட்கள் அடிக்கடி தீர்ந்த போய் எரிபொருளுக்காக மக்களை அலையவிடும் மாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மோசடி  மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Comments
Loading...