தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்..

இன்று அதிகாலை  நடிகரும்  சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் மற்றும் பொலிஸ்  தொடர்பில்   சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கருணாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கருணாஸ்  மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டபோது, அவரை  எதிர்வரும்  5ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை. குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...