தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதி நுட்பங்களுடன் வெளிவருகிறது ஒன்பிளஸ் 6!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட ஒன்பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட்போனின் பெயர் சார்ந்த தகவலை வழங்க மறுத்தாலும், புதிய ஸ்மார்ட்போனில் வழங்க மற்ற பிராசஸர் வெளியாகாததால் ஸ்னாப்டிராகன் 845 தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லௌ தெரிவித்தார்.

முன்னதாக பீட் லௌ அளித்த பேட்டியில் ஒன்பிளஸ் 6T வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை, ஒருவேளை ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்படாத அம்சம் ஏதேனும் வெளியாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 6T வெளியிடப்படலாம் என தெரிவித்திருந்தார். புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனினை அமெரிக்க நெட்வொர்க்களுடன் இணைந்து வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அமெரிக்க நெட்வொர்க் வழங்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையை ஒன்பிளஸ் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்க நெட்வொர்க்களுடன் வெளியிடுவது குறித்து பீட் லௌ எவ்வித கருத்தும் வழங்கவில்லை.

முன்னதாக லாவா ரெட் நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. லாவா ரெட் மற்றும் மேட் பிளாக் நிறம் கொண்ட ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Comments
Loading...