தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை பாதிப்பு..

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிகபப்டுகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 32 வயதுடைய சிவப்பிரகாசம் சிவசீலன் தம்மை விடுதலை செய்யக் கோரி கடந்த 5 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அக்கறையின்மையும் அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனது வழக்குகளை துரிதப்படுத்தி தன்னை விடுதலை செய்யுமாறு கோரியே அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இறுதிக் கட்ட யுத்ததின் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அவர்  கைது செய்யப்பட்டிருந்தார்

அவருக்கு எதிராக மூன்று வருடங்களின் பின்னர் 2012 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்  தனது  வழக்கு எப்போது நிறைவடையும் என்று தெரியாத நிலையில் அவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை யுத்தகாலத்தில் தனது சகோதரனையும், தாயையும் பறிகொடுத்திருந்தா.

இந்நிலையில் அவரது தந்தையும்  கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...