தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் திட்டத்தை தடுத்துநிறுத்துமாறு கோரிக்கை…

அனுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகாலதிட்டத்தை தடுத்துநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

குறித்த கோரிக்கையினை அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி சங்க செயலருமான வி.ஞானசந்திரன் விடுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ் வித்தியாலத்தில் நடைபெறும் அநீதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் நேற்றயதினம்  நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்  1961ம் ஆண்டு பாராளுமன்றில் நிறைவேற்றபட்ட சட்டத்தின் பிரகாரம் உருவாக்கபட்டதே அனுராதபுரம் விவேகானந்தா தமிழ்வித்தியாலயம். 1985ம் ஆண்டு வரை சிறப்பாக செயற்பட்ட நிலையில் 1985ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வால் பாடசாலை மூடபட்டிருந்ததாகவும்,

பின்னர் மீண்டும் முஸ்லீம் அதிபர்,ஆசிரியர் குழாமுடன் மீள இயங்கியது எனினும்,  இந்து தமிழ் மாணவர்களின் நலன் காக்க யாருமற்ற நிலையில் சிறிது, சிறிதாக பாடசாலை நிர்வாகத்தால் எமது மாணவர்களிற்கு அநீதிகள்  இழைக்கப்பட்டதாகவும் ,

இதன் காரணமாக  100 வீதம் இந்துக்களாக இருந்த பலர் மதமாற்றத்திற்கு உள்ளாகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த  1987 முதல் 2000 ஆம் ஆண்டுவரை விவேகானந்தா சபை இயங்காத நிலையில் குறிப்பிட்ட கால பகுதிக்குள் குறித்த பாடசாலையை முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நீண்டகால திட்டம் முஸ்லீம் நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்டதாகவும், அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு விவேகானந்தா சபை இயங்கஆரம்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும்  தற்போதுவரை பாடசாலையின் நிர்வாகம் பாடசாலையின் பழைய வரலாறுகளை அழித்து,சபை,மற்றும் கதிரேசன் ஆலயத்திற்கிடையிலான தொடர்புகளை துண்டித்து முஸ்லீம் பாடசாலையாக மாற்றும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றது.

எமது சபை கதிரேசன்ஆலயம்,விவேகானந்தா வித்தியாலம் ஆகிய மூன்றும் ஒரேநேர்கோட்டிலேயே அமைந்துள்ளது. தற்போதைய நிர்வாகம் வரலாறு தெரியாத இந்து தமிழ் பெற்றோர்களை மூளை சலவை செய்து விவேகானந்தா சபை மற்றும்; ஆலயத்துடனான தொடர்புகளை துண்டித்து வருகிறது.

இந்து மாணவர்களிற்கும் விவேகானந்தா சபைக்கும் அநீதி ஏற்படும் போது பௌத்தமத குருக்கள்,சிங்கள அறிஞர்கள், அரசியல்வாதிகள் எமக்கு உதவி வருகின்றனர்.

தற்போதுவரை இந்துமத விடுமுறை நாட்களில் பாடசாலை நடாத்தபடுகின்றது.வீபூதி தரிக்க அனுமதி மறுக்கபடுகின்றது. இந்துசமய பிரார்தனைகளிற்கு தடை விதிக்கபடுவதுடன், இந்து சமயம் கற்பிப்பதற்கு வகுப்பறை கொடுக்காமல் மரங்களின் கீழேயே நடைபெற்று வருகிறது.

விவேகானந்தன் என்ற பெயரில் இருந்த சஞ்சிகையின் பெயர் விவேகி என மாற்றபட்டது. விவேகானந்தரின் படம் அகற்றபட்டது. இந்து மாணவர்கள் பர்தா அணிவிக்கபட்டார்கள், சிவராத்திரி தினத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது . பாடசாலையில் கற்பிக்கும் 11 தமிழ் ஆசிரியர்களும் கதிரேசன் ஆலயத்திற்கு வருவதில்லை. அவர்களிற்கு தடைவிதிக்கபடுவதாக உணர்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தற்போது பாடசாலையில் நிகழ்ந்து வருகிறது. இது அநீதியான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது எமது முயற்சியின் விளைவாக வவுனியாவில் இருந்து இந்து அதிபர் ஒருவரை பாடசாலைக்கு நியமித்தோம்.எனினும் அவரை பிரதி அதிபராகவே மாகாண கல்வி பணிப்பாளர் அங்குநியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு இந்து அதிபர் நியமிக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். இது தொடர்பாக ஆளுனர், அரசஅதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டுவருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

Comments
Loading...