தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்..

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், ரஷ்யப் படையினரும் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில்  சிரியா – ரஷ்யா கூட்டுப்படையினர் நிகழ்த்தும் தாக்குதல்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.

இதையடுத்து, சிரியாவில்  உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த மாதம் முதல் சிரியாவில்  முகாமிட்டுள்ளனர்.

அதோடு , அங்குள்ள   ரசாயன ஆலைகள், ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர்  வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியாவின் அல் – அஸாக்கா மாகாணத்தில் உள்ள தல் ஷாயேர் கிராமத்தின் மீது நேற்று இரவு அமெரிக்கப் படைகள்  திடீரென வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்கபடைகளின் இந்த  தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க  கூட்டுப் படையின் இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...