தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமேசான் பிரைம் மியூசிக் இந்தியாவில் அறிமுகம்!

அமேசான் நிறுவனத்தின் பிரைம் மியூசிக் சேவை ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எக்கோ சாதனங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட அமேசான் மியூசிக் தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் கிடைக்கிறது.

மேலும் வலைத்தளங்களில் music.amazon.in என்ற இணைய முகவரியிலும் அமேசான் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று அமேசான் மியூசிக் சேவை அந்நிறுவனத்தின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் விளம்பர இடைவெளியின்றி மியூசிக் சேவையும் அடங்கும்.

தமிழ், தெலுங்கி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி மற்றும் இந்தி போன்ற வெவ்வேறு மொழிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் மொழியில் இசையை கேட்டு அனுபவிக்க முடியும். இத்துடன் ஆஃப்லைன் மியூசிக் டவுன்லோடு, அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் போந்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் இசையே தங்களது குரல் மூலமாகவே தேடவும், இயக்கவும் முடியும். தற்சமயம் அமேசான் மியூசிக் சேவையில் பல லட்சம் பாடல்கள் இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதில் இந்தியா மற்றும் சர்வதேச கலைஞர்களின் பிளேலிஸ்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Comments
Loading...