தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமைச்சர் பதவியை இழந்தாலும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை – விஜயகலா மகேஸ்வரன்..

அமைச்சர் பதவியை இழந்தாலும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என  விஜயகலா மகேஸ்வரன் திட்டவட்டமாகத் கூறியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில நாளிதழொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது  இனவெறுப்பைத் தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்றும்,, அரசியலை விட்டு தான்  விலக மாட்டேன் என்றும். தொடர்ந்தும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் அரசியலை விட்டு விலகப் போவதாகவும், நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி  இருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...