தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமைதி நிலவும் என்ற வாக்கியத்துடன் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன்னின் முகத்தை சிற்பமாக வரைந்துள்ள ஓவியர்..

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

அந்தவகையில் அவர்  வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தை ஆதரிக்கும் வகையில்  பூரி கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்துள்ளார்.

அதில் இனி அமைதி நிலவும் என்ற வாக்கியத்துடன் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன்னின் முகத்தை சிற்பமாக வடித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.

இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதேவேளை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று கொடுத்துள்ளமையும் குறிப்பிட்டு சொல்லத்தக்கது.

 

Comments
Loading...