தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூலின் அறிமுக விழா….

தமிழாய்வு மைய வெளியீட்டில் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” எனும் நூலின் அறிமுக விழா லண்டனில்  நடைபெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அல்பேட்டன் கொமினிற்றி ஸ்கூல் (Alperton community school, Ealing Road, Wembley, HA0 4PW) அரங்கத்தில் இந் நிகழ்வு  இடம்பெறவுள்ளது.

கடந்தகால, சமகால, எதிர்கால அறிவியல், அரசறிவியல் என பல்வேறு பரிமாணங்களை தரவுகள், தகவல்களின் அடிப்படையிலும், ஆய்வியல் அனுபவத்தின் ஊடாகவும், வாசிப்பிற்கான இலகு நடையிலும் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு  எழுதியுள்ளார்.

இந்த நூல் தமிழ் தரப்பினராலும், அரசறிவியல் மாணவர்களினாலும் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்கப்படுகின்றது.

அதோடு  தமிழ் தலைமைகளின் ஒன்றுபட்ட அரசியல் முன் நகர்விற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இந்நூல்  நோக்கப்படுகிறது.

நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தமிழாய்வு மையம் – பிரித்தானியா 07956903978, 07715925090 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.

Comments
Loading...