தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசாங்கத்திற்கு எச்சரிகை விடுத்துள்ள வடமாகாண சபை உறுப்பினர்..

உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் (திருத்தம்) சர்வதேச மனித உரிமை நியமங்களை மீறும் வகையில் அமையுமானால்,

அதற்கெதிராக கடுமையான போராட்டங்களை நடத்துவதற்கு தயங்க மாட்டோமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அரசாங்கத்திற்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தப் புதிய சட்டம், சர்வதேச மனித உரிமை நியமங்களை மீறும் வகையில் அமையுமானால் அதனை அமுல்படுத்த வேண்டாமெனக் கோரிக் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தயங்கப் போவதில்லை எனவும்  எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை தொடர்பில் அவரிடம்  வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...