தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு …

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும் என்றும்,அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க  கூறியுள்ளார்.
அதோடு   கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்  கடந்த 50 வருடங்களில் வடக்கு பகுதியில் பெரிதாக எவ்வித தொழிற்சாலையும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, காலைநிலை மாற்றத்தால் இன்னும் 40ஆண்டுகளில் வடக்கு பகுதி அரைப்பாலைவனமாக மாறக்கூடும் எனவும்  அதை சமாளிப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும் என்றும்  சம்பிக்க ரணவக்க  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...