Designed by Iniyas LTD
தென்னிலங்கை அரசியல் குழறுபடிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதோடு இரண்டு ஆண்டுகளில் முடிவுறுத்த வேண்டிய விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக இடம்பெற்றுவருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் சர்வதேச விளையாட்டு மைதானம் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்க மகிந்த அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்புடைய பதிவு
இதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கியபோதும் அதில் 109 மில்லியன் ரூபா மட்டுமே கிளிநொச்சிக்கு கிடைத்தது.
இதன் எஞ்சிய பணம் அப்போது இரகசியமாக அநுராதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கிற்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில் பின்னராக பொறுப்பேற்றிருந்த நல்லாட்சி அரசு மஹிந்தவின் மைதானம் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் அனுராதபுரத்திற்கு திருப்பிவிடப்பட்ட பணத்திற்காக அரச படையினர் இந்த கட்டுமானப் பணிகளின் மனிதவலுவை பயன்படுத்துவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் தொழில் அனுபவமற்ற படையினரைக்கொண்டு வருடக்கணக்கில் கட்டுமானப்பணிகள் இழுத்தடிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments