தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் – நீதி அமைச்சர் …..

நீண்ட காலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நல்ல செய்தி கிடைக்குமென, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு  பதிலளிகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியுமெனில்,
11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது​? என, நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரின் கூற்று தொடர்பில்  அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று, நீதி அமைச்சரிடம்  ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை  கூறியுள்ளார்.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம், ஆராய்ந்து வருவதாகவும்  அதுதொடர்பில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும்  நீதிஅமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...