தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அறிவியல் நகர் – விடியல் விளையாட்டுக்கழகத்தினரால்; நடாத்தப்பட்ட துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி..

அறிவியல் நகர் – விடியல் விளையாட்டுக்கழகத்தினரால்; நடாத்தப்பட்ட
துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியும்வெற்றிக்கிண்ணம் வழங்கலும்.

ஆறு கழகங்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இத் துடுப்பாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியானது, நேற்றையதினம்  பிற்பகல் 03:00 மணியளவில் திருமுறுகண்டி, இந்துபுரம் – பீனிக்சு விளையாட்டுக்கழக திடலில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்துபுரம் – பீனிக்சு விளையாட்டுக்கழகம் எதிர் அறிவியல் நகர் – விடியல் விளையாட்டுக்கழகம் மோதின. இதில் இந்துபுரம் – பீனிக்சு விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா – ரவிகரன் அவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்   சின்னராசா – லோகேசுவரன் அவர்கள், இந்துபுரம்
கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு.சிதம்பரம் – தர்மராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணமும்
பரிசில்களும் வழங்கப்பட்டன. வெற்றிக் கிண்ணத்தினை விருந்தினர்கள் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் ரவிகரன் அவர்கள் திரு.சேசுதாசு – லக்சிதரன் தலைமையிலான  இந்துபுரம் விளையாட்டுக்கழகத்தினருடனும் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவருடனும் கலந்துரையாடி ஊர்சார்ந்த குறைகளைக் கேட்டறிந்தார்.

விளையாட்டுத் திடல் மறுசீரமைப்பு, மின்சாரம் பெற்றுக்கொள்ளுதல் உட்பட்ட பல்வேறு குறைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டன.

இவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிப்பதாக ரவிகரன் அவர்கள் கூறியதுடன் இந்துபுரம் விளையாட்டுக்கழகத்தினர்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு பொருட்களை கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...