தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆபத்தை தருமாம்?? ..

தண்ணீர் நமது தாகத்தை போக்குவதோடு நமது வாழ்வையும் வளமாக வைத்து கொள்கிறது.

சாப்பிடும் போதும், சாப்பிட்ட பிறகும், அதற்கு முன்பும்… இப்படி எல்லா நேரத்திலும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.

சாப்பிடும் போது

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. இவை செரிமான கோளாறை தரும். மேலும், மது அல்லது வேறு ஏதேனும் குளிர் பானங்களை சாப்பிடும் போது குடித்தால் வயிற்றின் நிலை மிக மோசமாக மாறி விடும்.

 அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்களின் உடலில் பாதிப்பை சந்திக்கும் முதல் உறுப்பு உங்களின் கிட்னி தான். அதிக தண்ணீர் கிட்னியின் செயல்திறனை குறைத்து விடும். மேலும், ரத்த ஓட்டத்தையும் பாதிக்கும்.

உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிக வேகமாக உடற்பயிற்சிகளை செய்து விட்டு நீரை அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் உடனடியாக உடலின் தட்பவெப்பம் உயர்ந்து மயக்கம், தலை வலி, வாந்தி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்காதீர்கள். ஏனெனில் , பாட்டிலில்  உள்ள  நீர் அருந்தினால் புற்றுநோய், உடல் பருமன், வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும்.

தாகம் எடுக்கிறது என்று தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில், இது மிக பெரிய ஆபத்தை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக உடலில் சோடியம் அளவை இவை குறைத்து பாதிப்பை தரும். மேலும், உயிருக்கே கூட இதனால் ஆபத்து ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்களாம்.

Comments
Loading...