தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அழகுசாதன பொருட்களின் பிராண்ட் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில்  Bootleg நிறுவனத்தின் பெயரில் விற்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் விலங்கு மற்றும் மனிதக்கழிவுகள் இருந்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் தோல்சார்ந்த பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து  போலீஸார்  வாடிக்கையாளர்கள் போன்று அங்கு  சென்று, மலிவு விலையில் விற்கப்பட்ட மேக்அப் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

குறித்த அழகுசாதனை பொருட்களை  சோதனைக்குட்படுத்தியதில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் மனித, விலங்கு கழிவுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 21 கடைகளிலிருந்து இந்திய மதிப்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான அழகு சாதன பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும்  பிராண்ட் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...