தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அழிவின் விளிம்பில் உலகம்! அமெரிக்க விஞ்ஞானியின் அதிர்ச்சித் தகவல்

உலக அழிவு தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களினால் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிந்து விடும் என கூறப்பட்ட போதிலும், அது தொடர்பான எந்வொரு நிகழ்வும் குறித்த காலப்பகுதியில் பதிவாகவில்லை. எனினும் அந்த செய்தியை கேட்டு மக்கள் அச்சமடைந்தனர். ஆனாலும் உலக அழிவு தொடர்பில் புதிய செய்தி ஒன்று அமெரிக்க விஞ்ஞானியினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் உலக அழிவுக்கான நாட்கள் ஆரம்பமாகி விடும் என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து எதிர்வரும் 7 வருடங்களுக்குள் உலகம் முழுமையாக அழிந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நாட்டவரான டேவ் மீட் என்ற இந்த விஞ்ஞானியின் கருத்து தொடர்பில் மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். சிலர் அவர் ஒரு மனநோயாளி என தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டேவ் மீட் என்ற இந்த விஞ்ஞானியின் ஆய்விற்கமைய, கடந்த ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அமெரிக்காவில் தோண்றிய சூரிய கிரகணம் உலக அழிவிற்கான முதல் சமிக்ஞை என தெரிவிக்கப்படுகின்றது.இந்த சூரிய கிரகணத்திற்கு பின்னர் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு அழிவு சம்பவங்கள் பதிவாகியதாக விஞ்ஞானி சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்கா, ரஷ்யா, வடகொரியா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் அணு ஆயுத கட்டமைப்புகளை நிறுவுவது உட்பட உலக அழிவின் ஆரம்பம் என விஞ்ஞானி மேலும் தெரிவித்துள்ளார்.

Loading...