தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அவுஸ்திரேலியா சிட்னியின் தென் பிராந்தியத்தில் காட்டுத் தீ

அவுஸ்திரேலியா சிட்னியின் தென் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில்   நூற்றுக்கணக்கான தீயணைக்கும் படை யினர் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த  காட்டுத் தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவலாம் என அச்சம் காரணமாக, அப்பகுதிய்ல்  உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தென்கிழக்கு அவுஸ்திரேலியாவின் காலநிலை தற்போது அசாதாரண வெப்பநிலையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...