தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆக்ரோஷத்தால் என்ன கிடைக்கும்? கோலிக்கு ஸ்டீவ் வாஹ் கூறுவது என்ன??

ஸ்டீவ் வாக் கூறியதாவது, தென் ஆப்பிரிக்கா தொடரை பார்த்தேன், இந்த போட்டியில் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாகவே செயல்பட்டார். இது கோலிக்கு கேப்டனாக கற்றுக்கொள்ளும் காலம். கேப்டனாக அவர் இன்னும் வளர வேண்டும்.

அணியில் உள்ள ஓவ்வொருவரும் இவரைப்போல உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராக இருக்க மாட்டார்கள் என்பதை இவர் உணர வேண்டும். ரஹானே, புஜாரா போன்றவர்கள் அமைதியானவர்கள். எனவே சில வீரர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை கோலி புரிந்து கொள்ள் வேண்டும்.

அதே சமயம் எந்த இடத்தில் ஆக்ரோஷத்தைக் கூட்ட வேண்டும், எந்த சமயம் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆக்ரோஷத்தால் அவரது தலைமைத்துவம் அபாரமாக உள்ளது. அவரிடம் ஆளுமையும் சிறப்பாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...