தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த முல்லை மாணவி!

ஆசிய நாடுகளுக்கிடையிலான பாடசாலை மட்ட பளுதூக்கல் போட்டியில் 1ம் இடம் பிடித்து முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி தேவராசா தர்ஷிகா மற்றும் அவருக்கு பயிற்சியளித்த ஆசிரியர் பத்மநாதன் பிரதீபன் ஆகியோர் இன்று கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் நடைபெறவுள்ளது. செல்வபுரம் கிராம கலைமகள் விளையாட்டு கழகம் மற்றும் செல்வபுரம் கிராம கமக்கார அமைப்பு ஆகியன இணைந்து இந்த கௌரவிப்பு நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளனர். இந்த கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மாணவி தேவராசா தர்ஷிகாவை கௌரவிக்கவுள்ளார்.

Comments
Loading...