தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நான்கு வீரர்கள் …..

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும்  பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில்  நடந்து வருகின்றது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 4 வீரர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று கத்தாருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய பின்னர், குறித்த வீரர்கள் ஓட்டல் ஒன்றுக்கு அணியின் சீருடையுடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
இதனை அடுத்து, 4 பெண்களுடன்  4 வீரர்களும் மறுநாள் காலை வரை அங்கு இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து போட்டி விதிமுறைகளை மீறிய அந்த 4 வீரர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
அதற்கு முன்னதாக அவர்கள் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டு ஜப்பானுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த வீரர்கள் மீதான விசாரணை முடிந்த பின்னர், தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...