தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆண்களுக்கான  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்….

ஆண்களுக்கான  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால்(ICC),  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

அந்தவகையில் 2020-  ஆம் ஆண்டு  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது

இந்நிலையில்  ஆண்களுக்கான  டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  2020 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில்  மொத்தம் 16 அணிகள் பங்கேற்கிறது. அதில் 45 போட்டிகள்,மெல்போர்ன், சிட்னி,அடிலெய்ட், பெர்த், ஹொபார்ட், பிரிஸ்பேன் ஆகிய 7 நகரங்களில் உள்ள 7 மைதானங்களில்  நடைபெறுகிறது.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகளில் முதல் 8 அணிகள் நேரடியாக ‘SUPER 12’ சுற்றில் விளையாடுகின்றது.

SUPER 12’ சுற்றின் ‘A’ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளது. ‘B’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

அக்டோபர் 24 ஆம் தேதி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே நாளில் மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது

மீதமுள்ள 2  அணிகள் மற்றும் தகுதிச்சுற்றில் வரும் அணிகளுடன் மோதுகின்றது.

முதல் சுற்றில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், ‘SUPER 12’ சுற்றின் ‘A’ பிரிவு, ‘B’ பிரிவு என இரண்டிலும் தலா இரு அணிகள் சேர்க்கப்படும் என  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...