தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம்

ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று,  வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றால் பெருங்கடல் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.

இவை வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இவை இரு வகைப்படும்.

அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படும் இத்தகைய நீரோட்டங்கள் பருவநிலைகளை தீர்மானிப்பவையாகவும் உள்ளன.

இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டம் ((Atlantic Meridional Overturning Circulation – AMOC)) ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகங் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்கு காரணமாக  புவிவெப்பமயமாதல் இருக்கலாம் எனவும் சில அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

Comments
Loading...