தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை? பந்துவீச்சை தெரிவு செய்த இந்தியா!

மும்பையின் வான்கடே மைதானத்தில் இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இழந்து சோகத்தில் இருக்கும் இலங்கை அணி, இன்று ஆறுதல் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில், இந்திய பந்து வீச்சினை உபுல் தரங்கா மற்றும் குசால் பெரேரா சிறப்பாக எதிர்த்து ஆடினர். எனினும், நடுவரிசையில் களம் இறங்கும் திசாரா பெரேரா, குணரத்னே, சமரவிக்ரமா ஆகியோர் பொறுப்பாக விளையாட வேண்டியது அவசியம் இலங்கை அணியின் பந்து வீச்சு மோசமாக உள்ள நிலையில், ஏஞ்சலோ மேத்யூஸ் காயத்தால் விலகியது, இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வான்கடே மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் சர்வதேச டி20 போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி இங்கு விளையாடிய இரண்டு டி20 போட்டியிலும் தோல்வியுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய வெப்பநிலையை பொறுத்தவரை, இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், இந்த மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானதாகும். எனவே, இன்றைய போட்டியில் அதிக எண்ணிக்கையிலான ஒட்டங்கள் குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...