தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆலயங்களின் கோபுர கலசத்தில் தானியங்களை வைப்பது ஏன்? பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா ஏன் செய்யப்படுகின்றது?

மன்னராட்சி காலங்களில்  ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதற்கான காரணம் என்னவெனில்  கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

அந்த கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு  கொடுக்கின்றன.

இதனால் தான் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலத்தில் இருக்கும்.
குறிப்பாக வரகு தானியத்தை  அதிகமாக இருக்கும். காரணம் என்ன வென்றால் “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என்பதை  அக் காலத்திலேயே அறிந்து  வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
இந்த நுட்பம் மிகவும் சரியான விடயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது

இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது. அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும்

இதனால் தான்  பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது என்பதுதான் உண்மை.

ஆனால்  இன்றைக்கு  நாம் அதை  சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கின்றோம்.

Comments
Loading...