தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆளில்லா உளவு விமானம் ஒன்றை  தயாரித்துள்ள சீனா..

சீனா  புதியவகையான மேம்படுத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானம் ஒன்றை  தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திற்கு ஸ்கை ஹாக் என பெயரிடப்பட்டுள்ளது.

குற்த்த ஸ்டீல்த் வகை விமானத்தின் வேகம், தாக்கும் திறன், உளவுப் பணி குறித்தும் கிராபிக்ஸ் மற்றும் வீடியோவை சீனா  வெளியிட்டுள்ளது.

இந்த விமானம் ஒருமுறை மட்டும் எரிபொருளை நிரப்பி தொடர்ந்து 40 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 9 ஆயிரத்து 800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதும், சாலையில் செல்லும் ஒரு வாகனத்தின் பதிவெண்ணை படம் பிடிக்கும் வண்ணம் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை  முன்னதாக சீனாவிடம் ஸ்டார் ஷேடோ, ஷார்ப் ஸ்வார்ட் மற்றும் சி எச் 805 போன்ற  ஸ்டீல்த் வகை உளவு விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...