தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியாவில் புழுதி புயல்…சிவப்பாக மாறிய வானம்…

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஏற்பட்ட புழுதிப் புயலால், வான்பகுதியே, சிவப்பு நிறமாக மாறியுள்ளது.

தற்பொழுது உலக நாடுகள் பெரும்பாலானவற்றை பனிப்பொழிவும், கடுங்குளிரும், வாட்டியெடுக்கும்  கால நிலையில், ஆஸ்திரேலியாவை வெயில் வாட்டியெடுக்கிறது.

அங்கு வறண்ட வானிலை நிலவுவதால், அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், திடீரென புழுதிப் புயல் உருவானது.

அடர் மாசுக்கள் நிறைந்த இந்த புழுதி புயலால், வெளிச்சம் முழுவதும் குறைந்து, பொதுவெளிப்பகுதி முழுவதும் சிகப்பு நிறத்தில் காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...