தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங் அகர்வாலும், கே.எல்.ராகுலும் களம் இறங்கினர்.

முதல் ஓவரிலே இரண்டு பவுண்டரி அடித்த கே.எல்.ராகுல், ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட் (Hazlewood) பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தற்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. மயாங் அகர்வால் 39 ரன்களிலும், புஜாரா 14 ரன்களிலும் உள்ளனர்.

Comments
Loading...