தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டி- நோவக் ஜோகோவிச் 7 வது முறையாக வென்று சாதனை…..

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில்  செர்பியாவின் நோவக்  ஜோகோவிச்  பட்டம் வென்றுள்ளார்.

இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன்  ஆடவர் ஒற்றையர்  அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஸ்பெயின் நாட்டின்  நடால் மற்றும் செர்பியாவின் நோவக்  ஜோகோவிச் இறுதிப்போட்டியில் மோதினார்கள்.

இதுவரை இரண்டு வீரர்களும்  52 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நோவக் ஜோகோவிச் 27 போட்டிகளிலும், நடால் 25 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

இந்நிலையில்  பரபரப்பாக நடைபெற்ற  இந்த இறுதிப்போட்டியில் 6-3,6-2,6-3 என்ற செட் கணக்கில்  செர்பியாவின் நோவக்  ஜோகோவிச்  பட்டம் வென்றார்.

இதுவரை 6 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ள ஜோகோவிச், ஒன்றில்கூடத் தோற்றதில்லை  என்பதோடு .7 வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...