தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தலான வெற்றியை பெற்ற இந்திய அணி..

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தலான வெற்றியை பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,

டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.இந்நிலையில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில்  தனக்கான முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் அணிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதில் மொத்தம்  116 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.இரண்டாவது இடத்தில்  108 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் ,மூன்றாவது  இடத்தில் 107 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இடத்திலும் உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...