தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்து விமான நிலையத்தில் ரோபோக்கள் மூலம் கார்களை நிறுத்த முடிவு….

இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் ரோபோக்கள் மூலம் கார்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக கேட்விக் விமானநிலையத்தில்  இதனை  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விமானத்தை பிடிக்க அவசரமாகச் செல்பவர்கள் பார்க்கிங் இடத்திற்கு பதில் குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தி விட்டு செல்லலாமாம்.

அப்போது கார் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பதிவு செய்து செல்போனில் வைத்திருந்தால், அந்தத் தகவலை அங்கிருக்கும் கருவியில் செல்போன் மூலம் பதிவு செய்து விட்டு சென்று விடலாமாம்.

அதன் பின்னர் ரோபோ குறிப்பிட்ட காரை இழுத்துச் சென்று பார்க்கிங்கில் சாமர்த்தியமாக நிறுத்தி விடுமாம்.

கார் நிறுத்தப்பட்டுள்ள தகவல் செல்போனுக்கும் அனுப்பப்பட்டு விடும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் எனவும்  நம்பப்படுகிறது.

Comments
Loading...