தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இது தெரிஞ்சா இனிமே ஹேண்ட் ட்ரையர் யூஸ் பண்ணவே மாட்டீங்க

பொதுவாக தற்போதைய நவீன காலத்தில் அலுவலகங்கள், மால், ஹோட்டல், ஷாப்பிங் இடங்கள், தியேட்டர், கல்யாண மண்டபங்கள் என வெளியிடங்கள் கழிவறை பயன்படுத்தி வந்து கை கழுவிய பிறகு கைகளில் இருக்கும் ஈரத்தை போக  அருகே ஒரு மெஷின் இருக்கும்.

 வேகமாக வெப்பமான காற்றை வெளியிட்டு கைகளில் இருக்கும் ஈரத்தை ஒரே நிமிடத்தில் அது  போக்கிவிடும். சில குழந்தைகள் இதை விளையாட்டு பொருள் போல கருதி கைகளை வைத்து விளையாடுவதும் உண்டு.

பெரியவர்கள் கூட இது மிகவும் ஆரோக்கியமான, சுகாதாரமான பழக்கம் என்று தான் நினைத்து பின்பற்றுகிறோம்.  அதோடு  குழந்தைகளையும் பின்பற்ற வற்புறுத்துகிறோம்.

அதிர்ச்சி தகவல்கள்

ஆனால், நாம் பயன்படுத்தும்  இந்த ஹேண்ட் ட்ரையர்கள் மூலம்  சில அபாயமான ஆரோக்கியப் பிரச்சனைகள் எல்லாம் பரவுவதாக  அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெல்த் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் எனில், ஹேண்ட் ட்ரையர்களில் இருந்து வெளிவரும் சூடான காற்றானது காற்றில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தன்னுள் இழுத்துக் கொள்கின்றதாம்.

அதாவது கழிவறையில் பரவும் பாக்டீரியாக்கள் உட்பட  நாம் தண்ணீரை ஃபிளஷ் செய்யும் போது கழிவறையில் பரவும் பாக்டீரியாக்கள் உட்பட அனைத்தையும்  இந்த ஹேண்ட் ட்ரையர்கள் இழுத்து கொள்கின்றது என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.

இதனால் நீங்கள் கைகளின் ஈரத்தை போக்க ட்ரையர்களை பயன்படுத்தும் போது, அது இழுத்துக் கொண்ட பாக்டீரியாக்களும் சேர்த்தே உங்கள் கைகளில் பரவுகின்றன.

இதன் பிறகு நீங்கள் எந்த ஒரு உணவை உட்கொள்ளும் போதும், அந்த பாக்டீரியாக்களும் சேர்ந்த வயிற்றுக்குள் செல்கின்றன. இதனால் பல அலர்ஜி மற்றும் இன்பெக்ஷன் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இது குழந்தைகள் மத்தியில் வேகமாகவே பரவக்கூடியது.

ஆபத்துகள்!

ஈ-காயில் எனும் பாக்டீரியா மலத்தில் இருந்து பரவக் கூடியது. சாதாரணமாக நாம் எங்கே மலம் கழித்தாலும் அங்கே இந்த பாக்டீரியா பரவும். ஹேண்ட் ட்ரையரில் இருந்து வெளிவரும் சூடான காற்றானது இந்த பாக்டீரியாவையும் தான் உல் இழுத்துக் கொள்கின்றதாம்.

நீங்கள் மால், ஹோட்டல் சென்று கழிவறைகளில் இந்த ஹேண்ட் ட்ரையர் பயன்படுத்திய பிறகு உங்களுக்கோ, குழந்தைகளுக்கோ, நண்பர்களுக்கோ உபாதைகள், ஃபுட் பாய்சன் ஆகியிருந்தால், அதற்கு இந்த ஹேண்ட் ட்ரையர்களும் காரணமாக இருக்கலாம் என  சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆய்வுகள்!

அறிவியல் ஆய்வாளர்கள் ஹேண்ட் ட்ரையர்கள் வைத்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒரு பிளேட்டை ட்ரையர் கீழே முப்பது நொடிகளுக்கு வைத்து எடுத்து பரிசோதனை செய்தனர்.

வெறும் முப்பது நொடியில் 18 – 60 பாக்டீரியாக்கள் அதில் பரவி இருந்தன என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் கைகளில் எளிதாக நோய் கிருமிகள் பரவும் அபாயம் இருக்கிறது என்றும் சுகாதார நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீங்கள் பொது கழிவறைகளை பயன்படுத்த வேண்டும் என்பது கூட இல்லை, அதனுள் நீங்கள் வெறுமென நுழைந்து திரும்பினாலே இந்த கிருமிகள் தொற்று ஏற்படும்.

இது இயல்பு. ஆனால், நீங்கள் இந்த சூடான காற்றை வெளிப்படுத்தம் ஹேண்ட் ட்ரையர் பயன்படுத்தும் போது நோய் கிருமிகள் / பாக்டீரியாக்கள் பரவும் தொற்று ஏற்படும் அபாயத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் தான் இன்பெக்ஷன் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளtதாக   சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படி தவிர்ப்பது?

இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது. டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தலாம். அல்லது உங்களுக்கென தனி கர்சீப் கொண்டு பயன்படுத்தலாம் இதனால் கைகளையும் துடைத்துக் கொள்ள முடியும், பாக்டீரியா பரவும் அபாயத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

 

Comments
Loading...