தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவின் சாய்னா நேவால் நேற்றைய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 10-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. சிந்துவை எதிர்த்து களம் இறங்கினார்.

இந்த போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

இதன்மூலம் இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

Comments
Loading...