தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ‘தி இந்து’ நாளிதழ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) கலந்துக் கொண்டுள்ளார்.

இதன்போது அவருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ´கோ பெக் ராஜபக்ஷ´ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில், “இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிரான செயற்பாடுகளையே மஹிந்த தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மஹிந்தவினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை ‘தி இந்து’ நாளிதழ் ஒருபோதும் வெளியிடுவதில்லை. இந்நிலையில் மஹிந்தவை இந்தியாவுக்கு அழைத்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...