தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதித்துள்ள ஐசிசி…

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி   தடை விதித்துள்ளது  .

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு தவறான முறையில் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  ஐசிசி  வெளியிட்ட அறிவிப்பில், அவர் பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக செல்வதாகவும், இது  ஆட்டத்திற்கு முரணானது எனவும்  ஐசிசி கூறியுள்ளது.

மேலும் அடுத்த 14 நாட்களுக்குள் ஐசிசியின் பிரத்தியோக தளத்தில் சென்று அவரது சுழற்பந்துவீச்சை வீசி காட்ட வேண்டும். அது அங்கு சரி செய்யப்பட்டால் ,

அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார் என்றும்,  இல்லை எனில் அவர் சில காலம் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை செய்யப்படலாம் என்றும் ஐசிசி  தெரிவித்துள்ளது.

 

 

Comments
Loading...