தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அணியிலிருந்து அதிரடியாக தூக்கப்பட்ட தொடக்க வீரர்கள்…

நாளை  நடைபெறவுள்ள  மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு  11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை  துவங்க உள்ளது.

இந்நிலையில் இதற்கான 11 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விபரம் பின்வருமாறு:

புஜாரா,விராத் கோலி(கே),மயங்க் அகர்வால்,ஹனுமா விகாரி,ரோகித் ,ரஹானே,பண்ட் ,ஜடேஜா ,ஷமி ,இஷாந்த் ஷர்மா,பூம்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் தொடக்க வீரர்களான விஜய் மற்றும் ராகுல் நீக்கப்பட்டுள்ளனர்.

Comments
Loading...