தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அணி சிட்னியில் வென்று வரலாறு படைக்கும்- சேவாக்.

இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியாக மெல்போர்ன் வெற்றி அமைந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி,

மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.

அதேபோல் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் பூம்ரா, இதுவரை 20 விக்கெட் சாய்த்துள்ளார்.

இந்நிலையில்   இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றியாக மெல்போர்ன் வெற்றி அமைந்துள்ளதாகவும், .இந்திய அணியின் மிகப்பெரிய கூட்டுமுயற்சி ஆகும்.

அடுத்ததாக நாம் சிட்னியில் வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறோம். அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுக்கள்  என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...