தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய அணி மீது ICC நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ராணுவத்தினர் அணியும் தொப்பியை அணிந்து கொண்டு விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் வலியுறுத்தி இருக்கிறது.

ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவத்தினர் அணியும் தொப்பியை அணிந்து கொண்டு இந்திய அணியினர் விளையாடினர்.

இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்கும் விதத்தில் செயல்பட்டதாக கூறி இந்திய அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் பவத் சவுத்திரி, ஐசிசியிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments
Loading...