தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய கடலோர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

இந்திய கடலோர பொலிஸாரினால் கடந்த மார்ச் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 5 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற உத்தரவுவுக்கமைய   விடுதலை செய்யப்பட்டு  நேற்றைய தினம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 திருகோணமலை

திருகோணமலையை   சேர்ந்த தனுஷ்கர், மதுரங்க, ரணில், அருண், டிலான் ஆகியோரே இவ்வாறு விடுவிக்கபட்டு  இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை , சர்வதேச கடல் பரப்பில்  இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடலோர பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

மேலும்  ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் ஐவரையும் இலங்கை கடற்படையினர் யாழ். மீன்பிடித்துறையின் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Comments
Loading...