தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி…

நியூசிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி-20 மகளிர் கிரிக்கெட் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை நியூசிலாந்து வென்றது.

இந்தியா-நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகின்றது.

ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்த 2வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் எடுத்தது.

இந்திய வீராங்கனைகளில் அதிகபட்சமாக ஜெமிமா 73 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 36 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து 136 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகளில் வென்று நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

Comments
Loading...