தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 345 ஆக உயர்வு…

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின்   லோம்போக் தீவில்   சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின.

இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 131-ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

எனினும்  பலி எண்ணிக்கை 345ஐத் தாண்டிவிட்டதாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில்  காயமடைந்த 236 பேர் சிகிச்சைபெற்று வருகின்றதாகவும்,  வீடுகளை இழந்த 70 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...