தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இனவழிப்பு தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பு..

வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் உரிய ஆதாரங்களுடன் சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தமிழர் மரபுரிமைப் பேரவை  இணைத்தலைவர் வி.நவநீதனால் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கும், அதன் உறுப்பு நாடுகளுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது .

மகாவலி அபிவிருத்தி திட்டமூடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் ,தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல்கள்,

வனவளபாதுகாப்பு திணைக்களம் ,வனைஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் மக்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களுடன் கூடிய அறிக்கை  ஐ.நா வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...