தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய நாளில்…

1795 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் கேப் டவுண் நகரைக் கைப்பற்றியது.

தொடர்புடைய பதிவு
  • 1810 – மிகுவேல் ஹிடால்கோ என்ற மதகுரு மெக்சிகோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
  • 1812 – முதலாம் நெப்போலியன் மொஸ்கோவினுள் நுழைந்ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்ளிரவில் நகரை தீயிட்டுக் கொழுத்தினர். மொஸ்கோ நகரம் அடுத்த சில நாட்களில் முற்றாக எரிந்தது.
  • 1852 – இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
  • 1887 – மென்பந்தாட்டம் முதன் முதலில் சிக்காகோவில் விளையாடப்பட்டது.
  • 1908 – ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1920 – நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
  • 1963 – மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.
  • 1970 – ஜோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் ஹுசெயின் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.
  • 1975 – பப்புவா நியூ கினி, அவுஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.
  • 1978 – ஈரானில் டபாஸ் நகரை 7.5 – 7.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1982 – லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1987 – ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.
  • 2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
  • 2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
  • 2007 – தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் கொல்லப்பட்டனர்.
Comments
Loading...