தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இயற்கை பேரழிவு பாதிப்பில் கேரளா முதலிடம்…

உலகளவில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக குறித்த  அமைப்பு  அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.

அதில் உலக வெப்பமயமாதல் காரணமாக தொடர்ந்து 4வதுஆண்டாக கேரளாவில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த 1920ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தினால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த  குறிப்பிட்டுள்ளது.

மேலும்  சர்வதேச வானிலை அமைப்பு, சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் 4வது இடத்திலும், இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட பகுதிகளின் அடிப்படையில் முதல் இடத்திலும் கேரளா உள்ளதாக கூறியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், 2015, 2016, 2017 மற்றும் 2018 ம் ஆண்டில் தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments
Loading...