தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பவில்லை…

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில்  அவர்கள்  மிகுந்த துன்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவிகபப்ட்டுள்ளது.

இதனை   கிளிநொச்சி- பூநகரி கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் பிறான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.


இரணைதீவு மிக நீண்டகாலம் கடற்படையின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த நிலையில் அங்கு  மீள்குடியேறிருந்தனர்.

இந்நிலையில் மீள்குடியேறிய காலம் தொடக்கம் அந்த மக்கள் பழைய பாடாலை கட்டிடங்களிலும், தேவாலய கட்டிடங்களிலும் தங்கியிருக்கின்றதாகவும்,   இன்றுவரை அவர்களுக்கு அரை நிரந்தர வீடுகள் கூட வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.

மேலும் மலசகூடங்கள், குடிநீர் போன்ற வசதிகளும் கூட பூரணமாக வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவு மக்கள் வீட்டுதிட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தபோதும்  இதுவரை எந்த வசதிகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அவர்கள் மிக துன்பமான வாழ்க்கையை குறித்த  மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதோடு,  தொழில்ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள்  இரணைதீவு  மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...