தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டு கிலோ கல்லை வயிற்றில் சுமந்த நோயாளி….

நோயாளி ஒருவரின்  சிறுநீரகத்தில் உருவாகியிருந்த சுமார் இரண்டு கிலோ கிராம் எடை கொண்ட பெரிய கல்லொன்றை அனுராதபுரம் போதனா வைத்தியசாலை  மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

கடந்த 2ம் திகதி  குறித்த  சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

நொச்சியாகம, காலதிவுல்வெவ, 8 கிராமத்தை சேர்ந்த 41 வயதான ஜீ.ஜீ. காமினி ராஜபக்ச என்ற நோயாளிக்கு இந்த சத்திர சிகிக்சை நடத்தப்பட்டுள்ளது.

பாம்பு தீண்டிய காரணத்தினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை எக்ஸ்ரே பரிசோதனை செய்த போதே அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் ரி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நோயாளியின் சிறுநீரகம் ஒன்றில் இவ்வளவு பெரிய கல் இருந்ததை நான் தற்போதுதான் முதலில் பார்த்துள்ளேன்.

சிறுநீரகத்தில் இருந்த இரண்டு கிலோ கிராம் கல்லை அகற்றுவது சுலமான காரியமல்ல

நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை துண்டு துண்டாக அகற்றினோம்.

அனுராதபுரத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இப்படியான கற்கள் உருவாகின்றததாகவும், அனுராதபுரம் மக்கள் தண்ணீரை அதிகளவில் பருக வேண்டும் எனவும்,  இதன் மூலம் சிறுநீர் குழாய், சிறுநீரகங்களில் கல் உருவாவதை தடுக்க முடியும் எனவும் விசேட மருத்துவ நிபுணர் ரி.அரவிந்தன்  அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த நோயாளி உடல் நலத்துடன் தற்பொழுது அனுராதபுரம்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...