தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் அவர்களின் உடமைகள் அழிக்கப்படுகின்றது

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில், மயிலிட்டி வடக்கில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் அகற்றி வருவதோடு ஆயுதக் கிடங்கைச் சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகின்றதாகவும் கூரப்ப்டுகின்றது.

இதேவேளை மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் உள்ளது என்று தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தமை சுட்டிக்காட்டதக்கது .

எனினும் ஜனாதிபதி அவ்ர்களின் கோரிக்கையினை   மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...