தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவத்தினரின் உந்துருளிப் படையணியினர் நேற்று முதல் குடாநாட்டின் பல இடங்களில் ரோந்து நடவடிக்கை..

இராணுவத்தினரின் உந்துருளிப் படையணியினர் நேற்று முதல் குடாநாட்டின்  பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியுள்ளது.

தென்மராட்சிப் பகுதிகளிலும் வடமராட்சியின் சில பகுதிகளிலும் நேற்றுக் காலையில் உலாவிய  படையணியினர் மாலை யாழ் நகரின் பலாலி வீதி , காங்கேசன்துறை வீதிகளின் ஊடாக நகரின் மையப் பகுதிக்குள் உலாவியுள்ளனர்.

12 உந்துருளிகளில் ஆயுதம் தாங்கிய படையினரே இவ்வாறு சென்றுள்ளனர்.

படையினர் பயணித்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாதபோதிலும் மிகவும் வேகமாக அச்சுறுத்தலான வகையிலேயே பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில்  இன்று காலை வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் ,

மற்றும் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லப்பகுதியில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு பொலிஸார்  இளைஞர்களிடம் அடையாள அட்டைப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

இன்று தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமும் நாளை மாவீரர் நாளும் என்பதனாலேயே மேற்படி படையினர்  வந்திருக்ககூடும் என்பதனை ஊகித்த  மக்கள் மௌனமாக கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...