தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவமுகாமுக்குள் திருடினார்கள் எனும் குற்றசாட்டில்   இருவர் கைது

காங்கேசன்துறை தையிட்டியில்  இராணுவமுகாமுக்குள்  திருடினார்கள் எனும் குற்றசாட்டில்   இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும்  நேற்றைஅய்தினம்   இராணுவத்தினரால்  கைது செய்யபட்டு  காங்கேசன்துறை பொலிஸாரிடம்  ஒப்படைகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.டுள்ளார்.
இதேவேளை காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் நடத்தப்படும்  விருந்தினர் விடுதி, மற்றும்  அதனை அண்டிய உல்லாச கடற்கரை பகுதிக்கு வருவோரின் உடமைகளை திருடியவர் எனக்கூறி,
   மற்றொரு இளைஞரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...